அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நாம் ஆழ்ந்து பார்த்தால் தீபாவளி என்பது உருவாக முக்கிய காரணமாக இருப்பது திரவிடனின் பங்குதான் அதிகம். நெருப்பினை தெய்வமாக வாங்குபவர்கள் நம் தமிழர்கள். நமது தமிழ்நாட்டினை ஆண்ட மன்னர்கள் அனைவரும் முக்கியத்துவம் தந்தது நெருப்புக்குதான். அந்தவகையில் அனைத்து சடங்குகளும் தீயினை முன்னிறுத்தியே செய்யப்பட்டன. எந்த ஒரு அரச குடும்ப விழாவானாலும் சரி, அந்த நாட்டுக்கு தொடர்புடைய அனைத்து விழாக்களும் தீயினை வைத்தே கொண்டாடப்பட்டுள்ளது. அவர்களின் அரண்மனை மற்றும் கோவில்கள் அனைத்திலும் வெற்றியினையோ அல்லது முக்கிய விழாக்களை கொண்டாடும் போதும் விளக்குகளால் அலங்கரித்து உற்சாகமுடன் கொண்டாடினர். அக்கால மக்களும் தங்களது வீட்களில் அகல் விளக்கு மாடம போன்றவற்றை அமைத்திருந்தனர். தங்களது இறப்பு, பிறப்பு போன்றவற்றிலும் இந்த தீயானது முதலிடம் பெற்றது. எனவே இந்த தீபாவளி ஒன்றும் நமக்கு புதியதல்ல. பலகாலங்களாக நமக்கு வழக்கமாக இருந்து வந்தது இன்று மிக பெரிய பண்டிகையாக கொண்டாட படுகிறது.
பிற்காலத்தில் தான் பட்டாசு வெடிப்பதும் புத்தாடை அணிவதும் என ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.